ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பிச்சம்பட்டி மெயின் ரோட்டில் 50 ஆண்டுகள் கடந்த ஆலமரம் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் ஆலமரத்தில் தற்போது ஆயிரக்கணக்கான பழங்கள் உள்ளன. பழங்களை உணவாக்க கிளி, மைனா, குருவி, வவ்வால்ஏராளமான பறவைகள், அணில்கள் வந்து செல்கின்றன. பசுமையான இலைகளுடன் கூடிய மரத்தில் சிவப்பு நிற பழங்கள் மரத்திற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது.இதனை பலரும் ரசித்து செல்கின்றனர்