நூறு சதவீதம் மானியத்தில் 2000 ஆடுகள் :ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
01:31

ஊட்டி,:நீலகிரியில், நுாறு சதவீதம் மானியத்தில், 2000 ஆடுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால், தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு, நுாறு சதவீதம் மானியத்தில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கி, பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, நீலகிரியில், 4 ஊராட்சி ஒன்றியங்களில், 400 பயனாளிகளுக்கு தலா, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வீதம், 2000 ஆடுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது.தகுதிகள்இதில், பயனாளி, 60 வயதிற்கு உட்பட்டவராக, சொந்தமாக நிலம் மற்றும் கால்நடைகள் இல்லாதவராக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு துறை அல்லது உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றுபவராக இருக்க கூடாது. கடந்த, 5 ஆண்டுகளில், அரசின் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன் பெற்றவராக இருக்க கூடாது.கலெக்டர் அம்ரித் கூறுகையில், ''இத்திட்டத்தில் பயனடைய தகுதியுள்ளவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகங்களில் இருந்து விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து, சம்மந்தப்பட்ட வி.ஏ.ஓ., விடம் கையொப்பம் பெற்று சமர்பித்து பயனடைய வேண்டும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X