கோத்தகிரி:கோத்தகிரி பகுதி விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கோத்தகிரி தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், புதுப்பிக்கப்பட்ட பிரதான் மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், கேரட், உருளைக்கிழங்கு, வெள்ளை பூண்டு மற்றும் முட்டைகோஸ் பயிர்களுக்கு நடப்பு ராபி பருவத்தில், பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின்கீழ், பிரிமியம் தொகையாக, ஒரு ஏக்கர் கேரட் பயிருக்கு, 3,630.90 ரூபாய், முட்டைக்கோஸ் பயிருக்கு, 3,892.72 ரூபாய், வெள்ளைப் பூண்டு பயிருக்கு, 4,949.88 ரூபாய், உருளைக்கிழங்கு பயிருக்கு, 4,890. 60 ரூபாய் பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தவேண்டும்.மேலும், விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை, தங்களது பகுதி கிராம நிர்வாக அலுவலர் மூலம், இ--அடங்கலில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டும் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.