கூடலுார்:கர்நாடகாவிலிருந்து, கூடலுாருக்கு கடத்திவரப்பட்டபோதை வஸ்து பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துகளை, கர்நாடகாவில் இருந்து, காய்கறி மூட்டைகளில், சிலர் கூடலுாருக்கு கடத்தி வந்து, விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் வந்தது.தொடர்ந்து, எஸ்.ஐ., வெங்கடசாலம், எஸ்.எஸ்.ஐ., ராஜன் மற்றும் போலீசார் நேற்று, காலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, அக்ரஹாரம் சாலையில் உள்ள, காய்கறி கடையில், மூட்டைகளை ஆய்வு செய்தனர். அதில், மூன்று மூட்டைகளில் போதை வஸ்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.அதிலிருந்து, 3,950 போதை வஸ்து பாக்கெட்டுகள், 10 ஆயிரத்து 850 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கூடலுாரைசேர்ந்த காய்கறி வியாபாரி செல்வகுமார், 45, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.