கும்கிகளை விரட்டிய காட்டு யானை: பாடந்துறை அருகே பரபரப்பு | நீலகிரி செய்திகள் | Dinamalar
கும்கிகளை விரட்டிய காட்டு யானை: பாடந்துறை அருகே பரபரப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
01:34

கூடலுார்:கூடலுார் அருகே, கும்கி யானைகளை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.கூடலுார் பாடந்துறை கைமங்கொல்லி பகுதியில், 'அரிசி ராஜா' என்ற யானை முகாமிட்டுள்ளது.இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் அதனை விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த மற்றொரு காட்டு யானை கும்கி யானைகளை விரட்டத் துவங்கியது. அதனால், கும்கி யானைகள் திரும்பி ஓடின. வன ஊழியர்கள் அந்த காட்டு யானையின் கவனத்தை திசை திருப்பி விரட்டினர். இந்நிலையில், கும்கி யானை உதயன் நேற்று, முதுமலைக்கு அழைத்து செல்லப்பட்டது. காட்டு யானையை விரட்டுவதற் காக கும்கி யானை வசீம் கொண்டு வரப்பட்டது.மக்கள் கூறுகையில், 'தினமும் மக்களையும், வன ஊழியர்களையும் அச்சுறுத்தி வரும் அரிசி ராஜாவை, பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X