குன்னூரில் கன மழை: மரம் விழுந்து வாகனங்கள் சேதம் | நீலகிரி செய்திகள் | Dinamalar
குன்னூரில் கன மழை: மரம் விழுந்து வாகனங்கள் சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
01:36

குன்னுார்:குன்னுார் பேரக்ஸ் ராணுவ பகுதியில் மரம் விழுந்து கார், ஜீப் சேதமானது.குன்னுார் பகுதியில் நேற்று மதியம் கனமழை பெய்தது. மழை குறைந்த நிலையில், வெலிங்டன் பேரக்ஸ் ராணுவ பகுதியில் கற்பூர மரம் சாலையில் விழுந்தது. அதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ராணுவ ஜீப், பைக் சேதமடைந்தது. தொடர்ந்து, ராணுவ பணியாளர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.இதேபோல, குன்னுார் மவுன்ட் பிளசன்ட் பகுதியில் சகாயமாதா தேவாலய தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, இப்பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் கமல் என்பவரின் கார் சேதமானது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X