நெகமம்:நெகமத்தில், மூன்று கிராமங்களுக்கான பட்டா, சிட்டா திருத்த முகாமில், 90 மனுக்கள் பெறப்பட்டு, 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.பெரியநெகமம், சின்னநெகமம் மற்றும் என்.சந்திராபுரம் கிராமங்களுக்கான பட்டா, சிட்டா திருத்த முகாம் நேற்று, நெகமம் ஆர்.ஐ., அலுவலகத்தில் நடந்தது. முகாமில், மூன்று கிராம மக்கள் பங்கேற்று, 90 மனுக்களை தாசில்தார் அரசகுமாரிடம் அளித்தனர். உடனடியாக, 10 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. மற்ற மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில், துணை தாசில்தார் அனுசுயாதேவி, ஒன்றிய கவுன்சிலர் தங்கராஜ், ஆர்.ஐ., மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.