இடைவிடாது கனமழை: இயல்பு நிலை பாதிப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
இடைவிடாது கனமழை: இயல்பு நிலை பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
01:50

வால்பாறை:வால்பாறையில் நேற்று பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.வால்பாறையில் கடந்த மாதம் முதல், வடகிழக்குப் பருவமழை தெடர்ந்து பெய்கிறது. இதனால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் குறைந்த நிலையில், நேற்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்ய துவங்கியுள்ளது. இடைவிடாது பெய்த கனமழையால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடவில்லை. வால்பாறைக்கு சுற்றுலா வந்த பயணிகள், வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மழை மட்டுமின்றி, கடும் குளிரும் நிலவுவதால், மலைப்பகுதியில் மக்கள் அவதிப்பட்டனர்.தொடர் மழை காரணமாக, மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகள் நிரம்பியுள்ளதால், நீர் வரத்துக்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X