பஸ்களில் தொங்கல் பயணம் அனுமதிக்காதீங்க! ஆர்.டி.ஓ., கடும் எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
01:50

பொள்ளாச்சி:''பஸ்களில் தொங்கல் பயணம் மேற்கொள்ள கூடாது; ஆபத்தான பயணத்துக்கு அனுமதித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரித்துள்ளார்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த மாதம் முதல் அனைத்து பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல செயல்பட துவங்கியுள்ளன.இதனால், பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், கல்லுாரி மாணவர்கள் தொங்கல் பயணத்தை கட்டுப்படுத்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதில், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி முன், நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கோகுலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதாவது:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கல்லுாரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தொங்கல் பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் என்றும், அதனை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.மேலும், கல்லுாரி முடிந்ததும் மாணவர்கள் பஸ்களில் கூட்டமாக ஏற விடாமல், கண்காணிப்பு செய்ய கல்லுாரி நிர்வாகம் கல்லுாரி பணியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். அவர், மாணவர்கள் பஸ்களில் தொங்கல் பயணம் செய்யாமல் இருக்க கண்காணிப்பு செய்ய வேண்டும்.கூட்டமாக இருந்தால் மாற்று பஸ்களில் அனுப்ப வேண்டும். கூட்ட நெரிசல் குறையும் வரை பணியாளர் அங்கேயே இருக்க வேண்டும். ஒவ்வொரு கல்லுாரியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பஸ்களில் கூட்டமாக ஏற்றிச் செல்லும் போது, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொங்கல் பயணம் மேற்கொள்வதை அனுமதிக்கும் டிரைவர், நடத்துனர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில்லா பயணம் மேற்கொள்ள, இதுபோன்ற ஆபத்தான பயணத்தை யாரும் அனுமதிக்க கூடாது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.கூடுதல் பஸ் இயக்குங்கபொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பேராசிரியர் ஒருவர், 'பள்ளி, கல்லுாரி நேரத்தில் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால், கூட்ட நெரிசல் காரணமாக தொங்கல் பயணம் தொடர்கிறது. இதை தவிர்க்க, பள்ளி, கல்லுாரி நேரத்துக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர், ''பஸ்கள் கூடுதலாக இயக்க உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்,'' என்றார்.கூடுதல் பஸ் இயக்கணும்!பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பேராசிரியர் ஒருவர், 'பள்ளி, கல்லுாரிகளில் நேரத்தில் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால், கூட்ட நெரிசல் காரணமாக தொங்கல் பயணம் தொடர்கிறது. இதை தவிர்க்க, பள்ளி, கல்லுாரி நேரத்துக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்,' என கோரிக்கை விடுத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர், ''பஸ்கள் கூடுதலாக இயக்க உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X