வீட்டுக்குழாய் இணைப்புக்கு ஒத்துழைப்பு கொடுங்க | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வீட்டுக்குழாய் இணைப்புக்கு ஒத்துழைப்பு கொடுங்க
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
01:51

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தில், வீட்டுக்குழாய் இணைப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,' என, நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி அறிக்கை:நகராட்சி பகுதியில், குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது, கழிவுநீர் வீட்டு இணைப்புகள் வழங்கும் நிலையில் உள்ளது. பொள்ளாச்சி நகர பொதுமக்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வீட்டுக்குழாய் இணைப்புகளை, நகராட்சி ஒப்பந்ததாரர் வாயிலாக வழங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கழிவுநீர் குழாய் இணைக்கப்பட்டால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் பாதாள சாக்கடைக்கு சென்று விடும்.முதற்கட்டமாக, 3, 4, 6, 7, 13, 16 --- 27, 29, 30, 33 - 35, ஆகிய வார்டுகளில் கழிவுநீர் வீட்டு இணைப்புகள் வழங்கும் பணி நடக்கிறது. எனவே, இப்பகுதி மக்கள், இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.பாதாள சாக்கடை திட்ட வீட்டு இணைப்பு பற்றிய விபரங்கள் பெற குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு நகராட்சி உதவி பொறியாளர் மேற்கு, 94455 62140, உதவி பொறியாளர் கிழக்கு, 99622 39447 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X