ஒரே சீசனில் நிரம்பிய மூன்று அணைகள்... வாரிக்கொடுத்த பருவமழை!வறண்ட ஓடைகளில் கரை தொட்ட வெள்ளம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
01:51

உடுமலை:உடுமலை பகுதியிலுள்ள, அமராவதி, திருமூர்த்தி, உப்பாறு என மூன்று அணைகள் நிரம்பி, ஒரே சமயத்தில், உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.உடுமலை பகுதியில், நடப்பு வடகிழக்கு பருவமழை சீசனில், இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியான,மேற்கு தொடர்ச்சிமலை மற்றும் சமவெளிப்பகுதிகளிலும், கடந்த ஒரு மாதமாக கன மழை பெய்தது.வடகிழக்கு பருவமழையால், பி.ஏ.பி., பாசன தொகுப்பு அணைகளும், அமராவதி அணை மற்றும் உப்பாறு அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதில், வரலாற்று நிகழ்வாக உடுமலை பகுதியிலுள்ள, அமராவதி, திருமூர்த்தி மற்றும் உப்பாறு அணைகள் ஒரே சமயத்தில் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.அமராவதி அமராவதி அணை, ஜூன் முதல் மே வரையிலான நடப்பு நீர் ஆண்டில், தென்மேற்கு பருவமழையால், ஜூலை 23ல் நிரம்பியது.தொடர்ந்து மூன்று மாதம் உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டிலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்களில் பயிர் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது. இருப்பினும், அணை நீர்மட்டம், 85 அடிக்கு மேல் காணப்பட்டது.இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை துவங்கி, அணை நீர்ப்பிடிப்புகளில் பெய்த கன மழையால், கடந்த, நவ., 3ம் தேதி, அணை நிரம்பியது. கடந்த ஒரு மாதமாக அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.நேற்று காலை நிலவரப்படி, அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 87.50 அடியாகவும், நீர் இருப்பு, மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 3,821.43 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு, 2,163 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து, ஆற்று மதகு வழியாக, 2,150 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டிருந்தது.திருமூர்த்தி பி.ஏ.பி., பாசன தொகுப்பு அணைகளில் ஒன்றான, திருமூர்த்தி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.பி.ஏ.பி., 4ம் மண்டல பாசன நிலங்கள் மற்றும் உப்பாறு அணை, வட்டமலைக்கரை ஓடை அணை மற்றும் குளங்களுக்கு நீர் வழங்கப்பட்ட நிலையிலும், நீர்வரத்தும், வெளியேற்றமும் சீராக இருந்ததால், கடந்த, ஒரு மாதமாக அணையில் நீர்மட்டம் ததும்பிய நிலையில் இருந்தது.திருமூர்த்தி அணை, கடந்த,, 1997 டிச., 8ம் தேதி நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டது.அதற்கு பின், 24 ஆண்டுகளுக்குப்பிறகு, கடந்த, 1ம் தேதி, அணை நிரம்பியது. இதனையடுத்து, மதியம், 2:00 மணிக்கு, மிகை நீர் வழிந்தோடியில், ஒரு மதகு வழியாக நீர் திறக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை, 5 மதகுகள் வழியாக, வினாடிக்கு, 1,250 கன அடி நீர் திறக்கப்பட்டது.உடுமலை பகுதியில், மேற்கு நோக்கி பாயும் பாலாற்றில், இரு கரைகளையும் தொட்டு, பல ஆண்டுகளுக்கு பின் வெள்ளம் பாய்ந்தோடியது. இதனால்,ஆற்றின் கரையோரத்திலுள்ள கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.அணை நிலவரம்நேற்று காலை நிலவரப்படி, அணையில் மொத்தமுள்ள, 60 அடியில், 57.50 அடி நீர் மட்டம் இருந்தது. நீர் வரத்து, பாலாற்றின் வழியாக, 223 , காண்டூர் கால்வாய் வழியாக, 776 கன அடி என, 999 கன அடி நீர் வரத்து காணப்பட்டது.அணையிலிருந்து, பிரதான கால்வாய் வழியாக, 854, உடுமலை கால்வாய், 132, மிகை நீர் வழிந்தோடி வழியாக, 100 கன அடி மற்றும் குடிநீர், இழப்பு என, வினாடிக்கு, 1,114 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.உப்பாறு உடுமலை அருகே கெத்தல்ரேவ் பகுதியில் உப்பாறு அணை, அமைந்துள்ளது. போதிய நீர்பிடிப்பு பகுதிகள் இல்லாததால், பி.ஏ.பி., பாசன கசிவு நீர் மற்றும் மழை நீர் ஓடைகள் வாயிலாகவே அணைக்கு, குறைந்த நீர் வரத்து கிடைக்கும்.இவ்வாறு, பரிதாப நிலையிலிருந்து, உப்பாறு அணை நடப்பு மழை சீசனில், 16 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.நேற்றைய காலை நிலவரப்படி, உப்பாறு அணை நீர்மட்டம், 24 அடிக்கு, 23.66 அடியாக இருந்தது. அணைக்கு, வினாடிக்கு, 210 கன அடி நீர்வரத்தும், 236 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X