பொள்ளாச்சி:பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரியில், தேசிய மாணவர் படை தின விழா நடந்தது.பொள்ளாச்சி அருகே, பூசாரிப்பட்டியிலுள்ள பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 73வது தேசிய மாணவர் படை தினத்தையொட்டி ரத்ததான முகாம் நடந்தது. ஹயக்ரீவா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்தி வங்கி சார்பாக டாக்டர் பிரியதர்ஷினி மற்றும் குழுவினர் பங்கேற்று ரத்ததானம் பெற்றனர். இதில், 89 மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர். தேசிய மாணவர் படை அலுவலர் பவித்ரா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தேசிய மாணவர் படையினர், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.