ராமநாதபுரம் : ராமநாதபுரம் தொழிலாளர் நல அலுவலகம் முன் சி.ஐ.டி.யு., கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் எம்.கருப்பசாமி, துணைத் தலைவர்கள் நாகூர் பிச்சை, பெரியசாமி, முனியசாமி, துணை செயலாளர்கள் கே.எம்.கருப்பசாமி, முடியப்பன், மாவட்ட குழு விஜயன், கருணாநிதி முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் அய்யாத்துரை, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சந்தானம், சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் முத்துவிஜயன் கோரிக்கைகளை விளக்கினர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி நிறைவுரையாற்றினார். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வரிகளை குறைக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை தொழிலாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்த கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.