செய்தி சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
03:42

இன்று 386 தடுப்பூசி முகாம்தேனி: மாவட்டத்தில் இன்று 13வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. வட்டார வாரியாக ஆண்டிபட்டியில் 63, போடியில் 60, சின்னமனுார், கம்பத்தில் தலா 44, க.மயிலாடும்பாறையில் 27, பெரியகுளத்தில் 61, தேனியில் 49,



உத்தமபாளையத்தில் 38 என மொத்தம் 386 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மொத்தம் 1 லட்சத்து 45 ஆயிரத்து 950 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.கலெக்டர் ஆய்வுதேனி: தேனி கமாமராஜர் பஸ் நிலையம் அருகே உள்ள



கடைகளில் நேற்று கலெக்டர் முரளீதரன் ஆய்வு செய்தார். ஒமைக்ரான் வைரஸ் பரவலால் கடைகளுக்கு வருவோர் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு



ரூ.200 அபராதம் விதித்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மதுக்கடைக்கு எதிர்ப்புதேனி: ஆண்டிபட்டி அருகே அனுப்பப்பட்டி கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், அனுப்பப்பட்டி அருகே டாஸ்மாக் துவங்க உள்ளனர். இதனால் பெண்களுக்கு பிரச்னை ஏற்படலாம். இதுபற்றி முன்பு மனு அளித்ததால் பணி நிறுத்தப்பட்டது.



தற்போது மீண்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும், என கோரினர்.ரத்ததான முகாம்தேனி: வீரபாண்டியில் தேனி கலை, அறிவியல் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லுாரி தாளாளர் ஜவஹர்லால், செயலாளர் கலைவாணி ரத்த தானம் செய்து முகாமை துவக்கினர்.



100க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்ததானம் வழங்கினர். கல்லுாரியில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஆதார் திருத்த முகாம்தேனி: தபால் துறை சார்பில் கிராமங்களில் ஆதார் திருத்த முகாம்கள் நடைபெற்று வருகிறது.



உப்புக்கோட்டை தபால் அலுவலகத்தில் நேற்று துவங்கிய முகாம் டிச.,5 வரை நடைபெறுகிறது. இதில் ஆதார் பெயர், முகவரி, பிறந்ததேதி, போட்டோ திருத்தம் செய்து கொள்ளலாம். உதவி கண்காணிப்பாளர் ஜனகராஜ், பெரியகுளம் உட்கோட்ட ஆய்வாளர் அழகுராஜா, தேனி போஸ்ட் மாஸ்டர் கோபாலகிருஷ்ணன், அலுவலர்கள் கலந்து கொண்டனர். கிராமங்களில் சிறப்பு முகாம் தேவைப்படுவோர் 04546-254843 போனில் அழைக்கலாம்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X