சிவகாசி : சிவகாசி ஒன்றியத்தில் 2 வது தடுப்பூசி போடாதவர்கள் 40 ஆயிரம் பேர் உள்ளனர். இன்று நடைபெறும் தடுப்பூசி முகாமில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில், தடுப்பூசி போடாதவர்களின் அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு ஊசி போட வலியுறுத்த சிவகாசி ஒன்றியம் அலுவலகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.