ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் துாய தோமா சர்ச்சில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சபை மக்களின் குடும்பங்களை கிறிஸ்மஸ் தாத்தாவுடன் சென்று சந்தித்து வாழ்த்துக் கூறும் கீத பவனி நிகழ்ச்சி நடந்தது.இதை முன்னிட்டு சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை செய்ய குருமனையில் முதல் சந்திப்பு நிகழ்ச்சி துவங்கியது. சபைகுரு பால்தினகரன் தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர்கள் கிறிஸ்மஸ் தாத்தாவுடன் சபை மக்களை சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினர்.