மொய்கவர் சேகரித்து மாணவி கின்னஸ் சாதனை முயற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
04:17

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி வெவ்வேறு டிசைன்களில் 549 மொய்கவர்களை சேகரித்து கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்துள்ளார்.ராமநாதபுரம் வெளிபட்டினம் விஜயராகவன்மகள் வி.ஐஸ்வர்யலட்சுமி.



இவர் ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மொய் பணம் வைத்துதரும் விதவிதமான 549 கவர்களை சேகரித்துள்ளார். இவற்றை கின்னஸ் லிம்கா, அசிஸ்ட் ஆகிய உலக சாதனை அங்கீகாரம் வழங்கும் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளார். மாணவி சேகரித்த மொய்கவர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை முகாமில் காட்சிப்படுத்தப்பட்டது.



உதவி திட்ட அலுவலர் கண்ணன், அலுவலர்கள் பார்வையிட்டனர். மாணவி ஐஸ்வர்யலட்சுமி கூறுகையில், 'சென்னை, கோவை, திருச்சி, வேலுார், திருவண்ணாமலை, மதுரை, பெங்களூரு சென்று விதவிதமாக மொய்கவர் சேகரித்துள்ளேன். சித்தப்பாக்கள், அத்தை ஏற்கனவே உலகசாதனை செய்துள்ளனர். அவர்களை பார்த்து சாதிக்க ஆசைவந்து 549 மொய்கவர்களை சேகரித்துள்ளேன். இதனை உலகசாதனைக்காக அனுப்பியுள்ளேன்,' என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X