மழை, வைகை தண்ணீரால் 135 கண்மாய்கள் நிரம்பியது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
04:51

ராமநாதபுரம் : மாவட்டத்தில் தொடர்மழை, வைகைஆற்று தண்ணீர் வருகையால், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 135 கண்மாய்கள் நிரம்பியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவ., 1 முதல் 30 வரை 384 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.



மேலும் வைகைஆறு உபரிதண்ணீர்மூலம் 500 கண்மாய்கள்நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில்இருந்து பார்த்திபனூர் தலைமதகணைக்கு நேற்றைய நிலவரப்படி 9940 கனஅடி வீதம் தண்ணீர் வரத்துள்ளது.தலைமதகு அணையிலிருந்து வைகை ஆற்றின் வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு 7400 கன அடி வீதமும், வலது பிரதான கால்வாயில் 1100 கன அடி வீதமும், இடது பிரதான கால்வாயில் 1200 கன அடிவீதமும் தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது.



பொதுப்பணித்துறையின் (கீழ வைகை வடிநிலக் கோட்டம்) கட்டுப்பாட்டில் மொத்தம் 500 கண்மாய்கள் உள்ளன.இவற்றில் 135 கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 70 சதவீதம்வரை 348 கண்மாய்கள் நிரம்பியுள்ளன. பெரிய கண்மாயில் ( மொத்தம் 618 மில்லியன் கனஅடி) 390 மில்லியன் கன அடி அளவு தண்ணீர் உள்ளது. பாதுகாப்பான முறையில் தொடர்ந்து வைகை ஆற்று தண்ணீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X