அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த நலத் திட்ட அட்டை | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த நலத் திட்ட அட்டை
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
04:54

பரமக்குடி : மத்திய அரசின் தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த நலத்திட்ட மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்க அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் அமைப்பு சாரா தொழிலாளர்களை உள்ளடக்கி அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டமானது ஆக., 26ல் பிரதமர் மோடியால் துவக்கப்பட்டது.மாவட்டத்தில் உள்ள சிறு குறு விவசாயிகள், மீனவர்கள், தென்னை, பனை, உப்பளம், செங்கல் சூளை தொழிலாளர்கள், நெசவாளர்கள்,கட்டுமான தொழிலாளர்கள், நூறு நாள் பணியாளர்கள் என அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்களும் இதில் சேர முடியும்.படிப்பு சான்றிதழ்,

ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், அலைபேசி எண் சமர்ப்பிக்க வேண்டும். 1961 ஆக., 27 மற்றும் 2005 ஆக., 26 க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 16 வயது தொடங்கி 59 வயது உடையவர்கள் இதில் சேர்ந்து பயனடையலாம்.இத்திட்டத்தின்கீழ் பிரதம மந்திரியின் விபத்து காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்களை உள்ளடக்கி பயன்பெற முடியும். இத்திட்டம் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததால் தொழிலாளர்களை சென்று அடையாத நிலை உள்ளது.ஆகவே நகராட்சி மற்றும் ஒன்றிய வாரியாக அனைத்து துறையினரையும் ஈடுபடுத்தி தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X