கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் கட்டும் பணி: உளுந்துார்பேட்டை பகுதியில் விபத்து அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
05:03

உளுந்துார்பேட்டை,-உளுந்துார்பேட்டையில், தேசிய நெடுஞ்சாலையில் 80 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கிய மேம்பாலங்கள் கட்டுவது, சர்வீஸ் சாலை அமைப்பது போன்ற பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் விபத்துகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது.



போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் இருந்து, திருச்சி வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள், கடந்த 2004ம் ஆண்டு துவங்கியது. இதில், உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் இருந்து, பாடலுார் வரையிலான 55 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணியை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டி.டி.பி.எல்., நிறுவனம் மேற்கொண்டது. கடந்த 2009ம் ஆண்டில் நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்து, வாகன போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது.நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டபோதும், எந்தெந்த பகுதியில் மேம்பாலங்கள் அமைப்பது, சர்வீஸ் சாலைகள் அமைப்பது போன்றவை குறித்து சரியாக திட்டமிடப்படவில்லை. அதிக விபத்துகள் நடக்கும் பகுதிகளை கண்டறியாமலும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. இதனால், தினசரி விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.இதையடுத்து, உளுந்துார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகரித்து வருவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில், அதிக விபத்துகள் நடக்கும் பகுதிகளைக் கண்டறிந்து ஆய்வு அறிக்கையை அளிக்கும்படி, கடந்த 2014ம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.உளுந்துார்பேட்டையில் விருத்தாசலம் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் அருகிலும், உளுந்துார்பேட்டை அஜீஸ் நகர் ரவுண்டானா அருகிலும் சர்வீஸ் சாலைகள் அமைக்கவும், சாரதா ஆசிரமம், பாலி 10 பட்டாலியன் அணி (போலீஸ் பயிற்சி மையம்), ஆசனுார், சிறுவாச்சூர், ஆவிட்டி பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் கட்டுவதற்கும் பரிந்துரை செய்து ஆய்வு அறிக்கை அளிக்கப்பட்டது.



இந்த பணிகளுக்காக 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.தொடர்ந்து, டெண்டர் விடப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டில் பணிகள் துவங்கியது. ஆனால், துவங்கிய வேகத்திலேயே பணிகள் நின்று போனது. குறிப்பாக, சிறுவாச்சூர் மற்றும் ஆவிட்டி பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணி இதுவரை துவக்கப்படவே இல்லை. ஆசனுாரில் மேம்பாலம் பணிகளுக்காக சாலை அகலப்படுத்தப்பட்டது. இதற்காக அங்கு சர்வீஸ் சாலை அமைப்பதற்காக ஜல்லிகள் மட்டும் கொட்டப்பட்டு, அந்த பணியும் பாதியிலேயே நிற்கிறது. இதனால் விபத்துகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது.மேம்பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை வழங்காததால் பணிகள் துவக்கிய வேகத்திலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர் விபத்துகளால் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பலியாவதைத் தடுப்பதற்கு, தேசிய நெடுஞ்சாலையில் நின்றுபோன மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலை பணிகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக துவக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க வேண்டும். மண் கிடைக்காததால்பணிகளில் சிக்கல்டோல்கேட் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலைப் பணிகளை டெண்டர் எடுத்த நிறுவனம் பல்வேறு காரணங்களால் பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டது. இதனால், வேறொரு நிறுவனத்திற்கு இப்பணிகளைத் துவங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலால் இப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.



தற்போது, தொடர் மழையாலும் மீண்டும் பணிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மேம்பாலம் மற்றும் சாலை அமைப்பதற்கு தேவையான மண் கிடைக்கவில்லை. மண் கிடைத்தவுடன் அதற்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடக்கும். இன்னும் ஒரு மாதத்திற்குள் மேம்பாலம் மற்றும் சாலை கட்டுமானப் பணிகள் மீண்டும் துவங்கும்' என்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X