பாகூர்-தனியார் சோப்பு கம்பெனியில் வேலை செய்த பீகார் தொழிலாளி மர்ம சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிருமாம்பாக்கம் அடுத்த ஈச்சங்காட்டில் தனியார் சோப்பு கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு, பீகார் மாநிலம், பாட்னா மாவட்டம், தான்யாபூர் பகுதியைச் சேர்ந்த சர்வன் மங்கி 40; என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலைக்கு சேர்ந்தார்.அவரை நேற்று முன்தினம் காலை முதல் காண வில்லை. அவருடன் பணியாற்றும் சக தொழிலாளர்கள் அவரை தேடி வந்தனர். நரம்பை கடற்கரை அருகே உள்ள சவுக்கு தோப்பில் சர்வன் மங்கி துாக்கில் தொங்குவதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.