பாகூர்-மணல் கடத்தலில் ஈடுபட்ட மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு பின்னாச்சிக்குப்பம் சாலையில் ரோந்து சென்றனர்.அவ்வழியாக வந்த மினி வேனை (டி.என். 04 இ 7297) நிறுத்த முயன்றனர்.போலீசாரை கண்டவுடன் டிரைவர் நிற்காமல் வேனை வேகமாக ஓட்டிச் சென்றார். போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று, கன்னியக் கோவில் நான்கு முனை சந்திப்பு அருகே வேனை மடக்கினர்.சோதனையில், ஆற்று மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் நோணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சூர்யா 28; என்பவரை கைது செய்தனர்.