வங்கியாளர்கள் கடன் இலக்கை உயர்த்த வேண்டும்: அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
05:20

புதுச்சேரி-'வங்கியாளர்கள் பொது மக்க ளுக்கு கடன் வழங்கும் இலக்கை உயர்த்த வேண்டும்' என, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தினார்.புதுச்சேரி மாநில வங்கியாளர் குழுமம் சார்பில், நடந்த வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் விழாவில் அவர், பேசியதாவது:கொரோனா ஊரடங்கு காரணமாக சாமானிய மக்களிடம் பணப் புழக்கம் குறைந்துள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகள் மூலம் விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் துவங்க கடன் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டார்.இதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் இந்தியா முழுவதும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகள் மூலம் கடன் வழங்க வழிவகை செய்துள்ளார்.அதனடிப்படையில் புதுச்சேரி மாநிலத்தில் 4,280 பேருக்கு கடன் வழங்க 273 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வங்கியில் கடன் பெற்றால் திரும்ப செலுத்த வேண்டாம் என்ற எண்ணம் உள்ளது.பெற்ற கடனை திரும்ப செலுத்தும் போது இரண்டு பயன்கள் உண்டு. கடனை முறையாக திரும்ப செலுத்தினால் மீண்டும் வங்கியில் கடன் கிடைக்கும். முறையாக செலுத்தும் கடன் ஏழ்மை நிலையில் உள்ள மற்றொருவருக்கு கடன் கிடைக்க ஏதுவாக இருக்கும்.முதல் முறை வங்கியில் கடன் வாங்கும் போதுதான் சிரமமாக இருக்கும். வாங்கி கடனை திரும்ப செலுத்திவிட்டால், வங்கி மேலாளரே உங்களை அழைத்து கடன் தருவார். அதனை நீங்கள் பயன்படுத் திக்கொள்ள வேண்டும்.வங்கியாளர்கள் மிகப்பெரிய லோன் மேலா நடத்தியதற்கு பாராட்டுகள். வங்கியாளர்கள் பொதுமக்களுக்கு வழங்கும் கடன் இலக்கை உயர்த்தி அதிக பயனாளிகள் கடன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X