பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன- முதல்வர் ரங்கசாமி பாராட்டு-
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
05:21

புதுச்சேரி-'வங்கியாளர்கள் வாடிக்கையாளர்களை இன்முகத் தோடு வரவேற்று அலைகழிக்காமல் சொன்ன நேரத் தில் கடன் வழங்க வேண்டும்' என, முதல்வர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.புதுச்சேரி மாநில வங்கியாளர் குழுமம் சார்பில், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் விழா ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது.முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு கடன் வழங்கி பேசியதாவது:நிகழ்ச்சியில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு ரூ. 273 கோடி கடன் வழங்கப்படுகிறது. இதனால் மாநிலத்தில் புதிய முன்னேற்றம் ஏற்படுத்துவது நிச்சயம். குறைந்த வட்டியில் கடன் வழங்குவதால் அவற்றை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும்.எதற்காக கடன் வாங்குகின்றோமோ அதற்காக முதலீடு செய்யவேண்டும். குறித்த நேரத்தில் கடனை திருப்பிச்செலுத்தும் பழக்கத்தை வைத்துக்கொள்ளவேண்டும்.வங்கியாளர்களும் வாடிக்கையாளர்கள் கடன் வாங்கத்தானே வருகின்றனர். அவர்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. இன்முகத்துடன் வரவேற்று, கடன் வழங்குவதற்கான ஆவணங்களை பெற்று, வாடிக்கையாளர்களை அலைக்கழிக்காமல் சொன்ன நேரத்தில் கடன் வழங்கவேண்டும்.வங்கி சேவை மிகவும் முக்கியமானது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது வங்கிகள். புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை அனைத்து வங்கிகளும் உள்ளது. கிராமத்திலும் வங்கிகள் உள்ளது. ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கும், இளைஞர் கள் தொழில் தொடங்க கடன் வழங்க வேண்டும்.புதுச்சேரியில் நல்ல கல்லுாரிகள் உள்ளதால் சிறப்பான கல்வி மாணவர்களுக்கு கிடைக்கின்றது. அரசால் அனைவருக்கும் வேலை கொடுக்க முடியாது. எனவே இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ப தொழில் துவங்க கடன் வழங்கவேண்டும் என, கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், இந்தியன் வங்கி மேலாண் இயக்குனர் மற்றும் முதன்மை நிர்வாகி அதிகாரி சாந்திலால் ஜெயின், ஆர்.பி.ஐ., மண்டல இயக்குனர் சாமி, மத்திய அமைச்சக துணைச் செயலாளர் சுர்ஜித் கார்த்தி கேயன், நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணன்.இந்திய ரிசர்வ் வங்கி பொதுமேலாளர் சுரேஷ்குமார், இந்தியன் வங்கி பொதுமேலாளர் சூரிபாபு, களப் பொதுமேலாளர் ராஜேஸ்வரரெட்டி, புதுச்சேரி இந்தியன் வங்கி உதவிப் போது மேலாளர் செந்தில்குமார், முன்னோடி வங்கி மேலாளர் உதயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X