சிறுவன் கடத்தப்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
05:23

திருக்கனுார்-திருக்கனுாரில் சிறுவன் கடத்தப்பட்டதாக தகவல் பரவியதால், பரபரப்பு ஏற்பட்டது.மண்ணாடிப்பட்டு அடுத்த தமிழகப் பகுதியான மூங்கில்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் உதயா,21; விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது எதிர் வீட்டை சேர்ந்த 5 வயது சிறுவனை கடைக்கு செல்வதாக கூறி, பைக்கில் அழைத்து வந்துள்ளார்.இதற்கிடையே, இரவு 7:00 மணியளவில் உதயா, சிறுவனின் தாயை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மண்ணாடிப்பட்டில் இருந்து திருக்கனுார் செல்லும் சாலையில் வந்த தனது பைக்கை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து, தன்னை தாக்கிவிட்டு, சிறுவனை ஒரு லட்சம் கேட்டு கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய், தந்தை மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் திருக்கனுார் போலீஸ் ஸ்டே ஷன் எதிரே திரண்டனர்.சிறுவன் கடத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து மேற்குப் பகுதி எஸ்.பி. ரங்கநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலு, குமார் மற்றும் போலீசார் திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதி களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் உதயாவும் அங்கு வந்து, அவர்களு டன் சிறுவனை தேடினார். அப்போது உதயாவின் மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்தனர். அந்த போனுக்கு இரவு 8:30 மணி அளவில் ஒரு அழைப்பு வந்தது. போலீசார் எடுத்து பேசியபோது, மறுமுனையில் பெண் ஒருவர் பேசினார்.அதனை தொடர்ந்து, திருக்கனுார் டி.வி.மலை ரோட்டில் உதயா நண்பரின் தாய் பழனியம்மாள் வீட்டில் சிறுவன் இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சிறுவனை மீட்டு ஸ்டேஷன் அழைத்து வந்தனர். பழனியம்மாளிடம் நடத்திய விசாரணையில், உதயா பைக்கில் வந்து சிறுவனை தனது வீட்டில் விட்டுவிட்டு சென்றது தெரிய வந்தது. இதனால் சிறுவனை கடத்தியதாக உதய ஆடிய நாடகம் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுவன் கடத்தல் நாடகம் ஆடிய உதயா மீது போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X