கவர்னர் மாளிகைக்கு வெடி குண்டு மிரட்டல் | சென்னை செய்திகள் | Dinamalar
கவர்னர் மாளிகைக்கு வெடி குண்டு மிரட்டல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
05:35

சென்னை : சென்னையில், கவர்னர் மாளிகை உட்பட நான்கு இடங்களில் நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.



செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ரயில் நிலைய அதிகாரிக்கு நேற்று, மர்ம கடிதம் ஒன்று வந்தது. அதில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை, தலைமை செயலகம், எழும்பூர் மற்றும் மேல்மருவத்துார் ரயில் நிலையங்களில் குண்டு வெடிக்கும் என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து, சென்னை ரயில்வே போலீசாருக்கும், மாநகர போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

எங்கும் குண்டு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.கடிதம் எழுதிய மர்ம நபர் குறித்து, செங்கல்பட்டு ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்தவர், மேல்மருவத்துாரை சேர்ந்த, கங்காதரன், 60, என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X