கள்ளக்குறிச்சி-பணியின் போது இறந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் இருவரது குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதி 3 லட்சம் ரூபாய்வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராமச்சந்திரன் கடந்த பிப்ரவரி மாதம் உடல் நலக்குறைவால் இறந்தார்.இதேபோன்று, கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் தியாகதுருகம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உடல் நலக்குறைவால் இறந்தார்.இருவரதுகுடும்பத்தினருக்கும்முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய்க்கானகாசோலையை எஸ்.பி., ஜியாவுல்ஹக் வழங்கினார்.