கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் நடந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், 56 பேருக்கு 14.29 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.கள்ளக்குறிச்சியில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. விழாவிற்கு, கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜாமணி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி முன்னிலை வகித்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் வரவேற்றார்.விழாவில், சக்கர நாற்காலிகள், கை தாங்கிகள், மடக்கு குச்சிகள், தேசிய அடையாள அட்டை, மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணை, வங்கி கடன் என 56 மாற்றுத்திறனாளிளுக்கு 14 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளைப்பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் சிறப்பு முகாமில் பங்கேற்று மனு அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், இந்தியன் வங்கி மேலாளர் சுதர்சன், தனி தாசில்தார் மணிகண்டன், ரோட்டரி சங்கத் தலைவர் ராமலிங்கம், செயலாளர் சேகர், பொருளாளர் இமானுவேல் சசிகுமார், முன்னாள் ரோட்டரி தலைவர்கள் பெருமாள், சஞ்சீவ்குமார், துணைத் தலைவர் அம்பேத்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.