அன்னூர்: கோவை மாவட்டம் அன்னூர் தாலுகா தேவம்பாளையம் பகுதியில் அதிகாலை பெய்த மழை காரணமாக, வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜம்மாள்,70, என்ற மூதாட்டி மரணமடைந்தார். மற்றொரு அறையில் இருந்த மருமகன், குழந்தைகள் உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மூதாட்டி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் மற்றும் அன்னூர் தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.