பறிமுதல் சொத்துக்கள் ஏலம் எப்போது? நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பரிதவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

04 டிச
2021
11:52
பதிவு செய்த நாள்
டிச 04,2021 11:51

கோவை: நிதி மோசடி வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலத்தில் விடாமல் இழுத்தடிப்பது, முதலீட்டாளர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், 1990க்கு பிறகு ஏராளமான நிதி நிறுவனங்கள் புற்றீசல் போல உருவாகின. அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பொதுமக்களிடம் டிபாசிட் திரட்டிய நிதி நிறுவன உரிமையாளர்கள், ஒரு சில ஆண்டுகளிலேயே மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை, 1997ல் தமிழக அரசு இயற்றியது. இதற்கென சிறப்பு நீதிமன்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. தமிழக போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு, 2000ம் ஆண்டு ஜன.,1 முதல் செயல்பட தொடங்கியது. தமிழகத்தில் இந்தாண்டு செப்.,1 வரை, மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது, 2101 வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர். இவற்றில், 245 வழக்குகள் போலீஸ் விசாரணையில் உள்ளன. 418 வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது.


பணம் திருப்பி தந்தது உள்ளிட்ட காரணங்களால், 592 வழக்குகளில், மேல் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. 72 வழக்குகள், மற்ற பிரதான வழக்குகளுடன் இணைக்கப்பட்டு விட்டன. 159 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். 326 வழக்குகளில் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுத்தொகையை மோசடி செய்த நிறுவனத்தினர் திருப்பி தந்து விட்டனர். 131 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

15 லட்சம் பேர் பாதிப்பு
இதுவரை நடந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டோர், 15 லட்சத்து 84 ஆயிரத்து 836 பேர். ஏமாற்றப்பட்ட மொத்த முதலீட்டுத்தொகை 6,067 கோடி ரூபாய். இதில், 7 லட்சத்து 36 ஆயிரத்து 573 பேருக்கு முதலீட்டுத்தொகை 1,582 கோடி ரூபாய் திருப்பி தரப்பட்டுள்ளது. அதாவது, 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு 4500 கோடி ரூபாய் இன்னும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை.மோசடி செய்த முதலீட்டாளர்களின், 1998 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துள்ளது. இந்த சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கையை, அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர்கள் செய்ய வேண்டும்.ஆனால், பல்வேறு காரணங்களால், ஏலம் விடாமல் சொத்துக்கள், கோப்புகளில் தேங்கி கிடக்கின்றன. கோர்ட்டில் வழக்கு முடிந்தவுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக போலீசார் ஒதுங்கிக் கொள்கின்றனர். இத்தகைய நடைமுறை, பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட மோசடி பேர்வழிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.


இதனால், பணத்தை கடைசி வரை திரும்பப் பெறாமலேயே முதலீட்டாளர்கள் இறந்து போகும் அவலமும் நடக்கிறது. ஆமை வேக அரசு நடைமுறைகள், முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.பறிமுதல் சொத்துக்களை விரைந்து ஏலத்தில் விடவும், பாதிக்கப்பட்டோருக்கு முதலீடு திரும்பக் கிடைக்கவும் செய்யும் வகையில், மாவட்ட வருவாய் அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகுந்த உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-டிச-202101:28:43 IST Report Abuse
Natarajan Ramanathan பறிமுதல் செய்த சொத்துக்களை விரைந்து ஏலத்தில் விட்டு, அதனால் பாதிக்கப்பட்டோருக்க முதலீடு திரும்ப கிடைக்கவும் செய்தால்தானே அவர்கள் மீண்டும் எங்காவது முதலீடு செய்து ஏமாறுவார்கள்....
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
04-டிச-202122:14:21 IST Report Abuse
spr "சரத் கமல் சிவாஜி ஆகியோர் ராயப்பேட்டை நிதியில் பணம் வாங்கிக்கொண்டு கட்டவில்லை என்றும்தகவல் உண்டு" மக்கள் நீதி மையம் (சொத்து மதிப்பு 125 கோடி இருப்பதாக தேர்தல் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்) மற்றும் சரத் (கட்சியே காணவில்லை காசு எங்கே இருக்கும் ) இருவரும் உயிருடன் இருக்கிறார்கள் சிவாஜிக்கும் வாரிசு இருக்கிறார்கள் சொத்தும் இருக்கிறது ஆனால் மூவரும் கழக காவல் உடையவர்கள் காசு எங்கிருந்து வரும்
Rate this:
Cancel
Mohan - Salem,இந்தியா
04-டிச-202120:00:46 IST Report Abuse
Mohan சுலபமாக ""ஆசை பேராசை"" என வகைப்படுத்தி இத்தகைய ஏமாற்றுதல் களை ஏற்றுக் கொள்ளும்படியான மன நிலைக்கு பொதுமக்களை தள்ளிவிடுவது முறையன்று. பொதுமக்கள் சேமிப்புக்கு அரசு மற்றும் வங்கிகள் தரைமட்ட வட்டி தரும் நிலையில், கீழ் நடுத்தர மக்கள், உத்தரவாதமில்லாத வேலைகளில் இருப்பதனால், எதிர்பாராத செலவுக்கு தேவைப்படும் என்னும் கருத்தில். இந்த மாதிரியான போலிகளை நம்பி ஏமாற்றுகின்றனர். தைரியமாக தவறு செய்பவர்களை ஒழிக்க முயற்சி எதுவும் அரசு செய்வதில்லை. மாறாக பணத்தட்டுப் பாட்டால் தவிக்கும் மக்களுக்கு உதவாமல் வெற்று உபதேசம் செய்வது பயனற்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X