சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் கருணை இல்லத்தில், மாணவ, மாணவியர் சேர்க்கை இன்று தொடங்குகிறது. தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள், இருவரையும் இழந்து பாதுகாவலரிடம் உள்ள குழந்தைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகள், பெற்றோர் இருந்தும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சேர்த்துக் கொள்ளப்படுவர். உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் இலவசம். தொடர்புக்கு, 99428 40278 என்ற எண்ணை அணுகலாம்.