கோரிக்கைகளை வலியுறுத்தி டவர்லைன் கீழ் குடியேறிய விவசாயிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
14:05

ஈரோடு: உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விளை நிலத்தில் அமைந்துள்ள உயர் மின் கோபுரத்தின் கீழ் அமர்ந்து, குடியேறும் போராட்டத்தை ஈரோட்டில் துவக்கினர். விருதுநகர் முதல் திருப்பூர் வரை, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின், 765 கிலோ வாட் திட்டப்பணிகளை, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவடையும் வரை, நிறுத்தி வைக்க வேண்டும். கடந்த ஆட்சியில் உழவர்களின் எதிர்ப்புக்கு இடையே அமைக்கப்பட்ட பவர்கிரிட், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின், 16 திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மின் கோபுரம் அமையும் இடத்துக்கு, 100 சதவீதத்துக்கு பதில், 200 சதவீத இழப்பீடும், கம்பி செல்லும் இடத்துக்கு, 20 சதவீதத்துக்கு பதில்,100 சதவீத இழப்பீடும், திட்டப் பாதையில் உள்ள வீடு, கிணறு, ஆழ்குழாய் கிணறு உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு பொதுப்பணித்துறை கணக்கீட்டின்படி இழப்பீடும் வழங்க வேண்டும். 100 சதவீத ஆதார தொகை, மாத வாடகை, பயிர் மற்றும் மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசு கொச்சியில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு, 3,500 கி.மீ., தூரம் கேபிள் அமைத்து கொண்டு செல்லும் நிலையில், 300 கி.மீ., தூரத்தை கேபிளில் கொண்டு செல்ல முயல வேண்டும் என வலியுறுத்தி, டவர்லைனின் கீழ் குடியேறும் போராட்டத்தை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் அறிவித்தனர். இதன்படி, ஈரோடு அருகே மூலக்கரையில், நேற்று டவர்லைன் கீழ் குடியேறும் போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதில், 28 பேர் போராட்டத்தை தொடர திட்டமிட்டுள்ளனர். ஈரோடு டவுன் டி.எஸ்.பி., ஆனந்தகுமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X