ஆத்தூர்: ஆத்தூரை சேர்ந்தவர் பெரியசாமி, 40. இவர், கடந்த, 28ல், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் 'ஸ்பிளண்டர்' பைக்கை நிறுத்தியிருந்த நிலையில் மாயமானது. ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணையில், சீலியம்பட்டியை சேர்ந்த ரிக் தொழிலாளி முருகேசன், 41, திருடியது தெரிந்தது. அவரிடம் மேலும் விசாரித்ததில், பல்வேறு இடங்களில் இரு மொபட், ஆறு பைக் திருடியது தெரிந்தது. நேற்று, அவரை கைது செய்த போலீசார், எட்டு வாகனங்களை மீட்டனர்.