தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ஐந்தாமாண்டு நினைவு நாள், அ.தி.மு.க., சார்பில் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள ஜெயலலிதா உருவச்சிலை மற்றும் உருவ படங்களுக்கு, அந்தந்த பகுதி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். மேலும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இதேபோல் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவச்சிலை, உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.