இலங்கையில் 60 தமிழக படகுகள் மீட்டுத்தர மீனவர்கள் வலியுறுத்தல் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
இலங்கையில் 60 தமிழக படகுகள் மீட்டுத்தர மீனவர்கள் வலியுறுத்தல்
Added : டிச 04, 2021 | |
Advertisement
 

ராமநாதபுரம்:இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 படகுகளை மீட்பதில் தமிழக அரசு பாராமுகம் காட்டு வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தாலும், அவர்களை விடுவிக்கும் போது படகுகளையும் விடுவிப்பது வழக்கம். அதன் பின் அந்த நாட்டு அரசு புதிய சட்டம் இயற்றியது. அதன்படி பறிமுதல் செய்யப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் நாட்டுடைமை ஆக்கப்படும் என அறிவித்தது.
இருப்பினும் இரு நாட்டு அரசுகளும் பேச்சு நடத்தி அவ்வப்போது படகுகளை விடுவித்து வந்தன.கடந்த 2019 நவம்பரில் இந்தியா வந்த இலங்கை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்சே இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளும் விடுவிக்கப்படும் என அறிவித்தார்.அதன்பின் 2020 வரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 92 படகுகள், உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த 2021ல் பிடிபட்ட 60 படகுகள் தற்போது இலங்கையிடம் உள்ளன. இவை கடற்படை தளங்களில் நிறுத்தப்பட்டு வீணாகும் நிலை உள்ளது. ஒவ்வொரு படகும் 25 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ளவை. படகுகளை இழந்த மீனவர்கள் தொழில் பாதிக்கப்பட்டு தவிக்கின்றனர். 'தமிழக அரசும், மீன்வளத் துறையும் உடனடியாக படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மீனவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X