கடலில் கலக்கும் நீரை திருப்பி விட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
23:12

மானாமதுரை-மானாமதுரை அருகே உள்ள உப்பாற்றில் வரும் வெள்ள நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து நீரை சுப்பன் கால்வாயில் பொதுப்பணித்துறையினர் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கண்மாய் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை, சிவகங்கை மாவட்டத்திலுள்ள கண்மாய், ஏரி, குளங்கள், வரத்துகால்வாய்களில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் உப்பாறாக மானாமதுரை அருகே செய்களத்துாரை ஒட்டியுள்ள வைகை ஆற்றுப்பகுதியில் சேர்ந்து ராமநாதபுரம் அருகே கடலில் கலக்கிறது.இந்த வெள்ள நீர் கடலில் கலப்பது தடுக்க 1987ல் சுப்பன் கால்வாய் திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை இளையான்குடி பகுதியில் உள்ள 60 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.மானாமதுரை அருகே கள்ளர்குளம், இளையான்குடி அருகே பிடாரனேந்தல்ஆகிய இடங்களில் மதகணைகள் கட்டப்பட்டு அந்தந்த பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் பிரித்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.நாளடைவில் வைகை மற்றும் உப்பாற்றில் வெள்ளம் வராததை காரணம் காட்டி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாயை துார்வாராததாலும்,மராமத்து செய்யாததாலும் கால்வாய் பகுதி மேடாகி வெள்ள காலங்களில் கால்வாயில் தண்ணீர் வராமல் வைகை ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இடது பிரதான கால்வாய் பாசன சங்க அய்யாச்சாமி கூறுகையில், உப்பாற்றில் வரும் மழை நீரை மானாமதுரை, இளையான்குடி பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு திருப்பி விடும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட சுப்பன் கால்வாய்த்திட்டம் தற்போது செயலிழந்து கிடப்பதால் மேற்கண்ட கண்மாய்களுக்கு தண்ணீர்வரத்து இல்லாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம்முறையாக சுப்பன் கால்வாய் திட்டத்தை பொதுப்பணித் துறையினர் மூலம் துார்வாரி வீணாக கடலில் கலக்கும் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமுருகன் கூறுகையில், சுப்பன் கால்வாய்த்திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால் தற்போது உப்பாற்றில் வரும் நீர் செய் களத்துார் கால்வாயின்கரைகளை உடைத்து செல்வதினால் செய்களத்துார்,கள்ளர் வலசை, கல்குறிச்சி பகுதிகளில் உள்ள வயல்களில் உள்ள பயிர்களை மூழ்கடித்துள்ளது.முறையாக சுப்பன் கால்வாய் திட்டம் செயல்பாட்டில் இருந்தால் வெள்ள நீர் அதில் திருப்பிவிடப்பட்டிருந்தால் மானாமதுரை, இளையான்குடி ஒன்றியங்களில் உள்ள 60க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் சென்றடைந்து விவசாயம்செழிக்க வசதியாக இருந்திருக்கும், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X