நாமக்கல்:நாமக்கல் அருகே, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு எஸ்.ஐ,., கைது செய்யப்பட்டார்.நாமக்கல் மாவட்டம், மானத்தி செலம்பகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், 43. இவர் மீது, பிப்ரவரி 7ல் வேலகவுண்டம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அடிதடி வழக்கு பதியப்பட்டது.
'இந்த வழக்கில் இருந்து விடுவிக்க, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்' என, செல்வகுமாரிடம் வேலகவுண்டம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ., சண்முகம், 56, தெரிவித்து உள்ளார்.செல்வகுமார், இது குறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். நேற்று காலை மானத்தி ஊராட்சி அலுவலகம் அருகே, சண்முகத்திடம் செல்வகுமார் லஞ்ச பணம் கொடுத்தார். மறைந்திருந்த போலீசார், சண்முகத்தை கைது செய்தனர்.