மதுரை:மதுரை மாவட்டத்தில் நேற்று காலை பெய்த கனமழையால் கருப்பாயூரணி பகுதியில் ஓடைப்பட்டி, ஒத்தப்பட்டி, திடியனுார் கிராம சாலைகள் துண்டிக்கப்பட்டன. கருப்பாயூரணியில் மக்கள் மறியலில் ஈடுபட, ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. மதுரை ஆபீசர்ஸ் டவுன் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உடைந்து நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.அப்பகுதி மக்கள் குலமங்கலம் ரோட்டில் சில நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டனர்.