மதுரை:மதுரையில் எல்லீஸ் டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான ராதா நினைவு திறந்தநிலை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தொடங்கின.முதல்நாள் போட்டியில் 9வயது ஆடவர் பிரிவில் சென்னை ஸ்ரீவந்த் 11-5, 11-9, 11-5 என்ற செட்களில் காரைக்குடி ஜெயச்சந்திரனை வீழ்த்தினார். மகளிர் பிரிவில் ஈரோடு வருணிகா 11-6, 11-7, 11-4 செட்களில் ஈரோடு ரேஷ்மாவை வீழ்த்தினார்.
11 வயது ஆடவர் பிரிவில் தேனி சத்யநாராயணன் 11-3, 11-7,11-8செட்களில் சென்னை ஸ்ரீவந்த்தை வீழ்த்தினார். மகளிர் பிரிவில் திண்டுக்கல் அக்சரா 11-9, 13-11, 11-4 செட்களில் ஈரோடு வருணிகாவை வீழ்த்தினார்.
13 வயது ஆடவர் பிரிவில் மதுரை விஷ்ணு பாலாஜி 11-6, 5-11, 7-11, 11-4, 11-4 செட்களில் தேனி சத்யநாராயணாவை வீழ்த்தினார். மகளிர் பிரிவில் மதுரை ஆராதனா 9-11, 11-2, 11-8, 11-7 செட்களில் மதுரை அனன்யாவை வீழ்த்தினார். அகாடமி செயலாளர் பாலகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்தார்.