பணம் தராததால் சேவை குறைபாடு: இ.எஸ்.ஐ., மருத்துவமனை மீது நோயாளி புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2021
01:24

அன்னுார்:'கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், பணம் தராதவர்களை அலட்சியமாக நடத்துகின்றனர்' என, 70 வயதான, கொரோனா நோயாளி ஆதங்கத்துடன் கூறினார்.திருப்பூரைச் சேர்ந்த, 70 வயது முதியவர், அன்னுார் அருகே அ.மேட்டுப்பாளையத்துக்கு தனது மகள் வீட்டுக்கு, மனைவியுடன் வந்தார். உடல் நலம் பாதித்ததால், அன்னுார் அரசு மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானது.அம்முதியவர் கூறியதாவது:தொற்று உறுதியானதும், சொந்த ஊர் திருப்பூர் என்பதால், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றோம். சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்து விட்டனர். அன்னுாரில் தொற்று கண்டறிந்ததால், கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என திருப்பி அனுப்பினர்.கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு வந்த இளைஞர்கள், தினமும் 2,000 ரூபாய் கொடுத்தால் தேவையான உணவு, பிற சேவைகள் வழங்கப்படும் என கேட்டனர். வசதி இல்லாததால், பணம் தர மறுத்து விட்டேன். என்னுடன் வந்த சிலர், மூன்று நாட்களுக்கு என, 6,000 ரூபாய் செலுத்தினர். பணம் தருபவர்களுக்கு ராஜ உபசாரம் நடக்கிறது. எனக்கு எவ்வித சேவையும் வழங்கவில்லை. ஊசி கூட போடவில்லை. மாத்திரை மட்டுமே தந்தனர். இதுகுறித்து தெரிவித்தபோது, சளி காய்ச்சல் அதிகமாக இருந்தால் மட்டுமே ஊசி போடுவர். இல்லாவிட்டால் மாத்திரை மட்டும் தரப்படும் என்றனர். பணம், தராதவர்களுக்கு சேவை குறைபாடும் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் ரவீந்திரனிடம் கேட்டபோது, ''இப்புகார் குறித்து, கலெக்டர் அளவில் விவாதிக்கப்பட்டு, 'பெய்டு அட்டெண்டர்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது. 'பெய்டு அட்டெண்டர்' கண்டறியப்பட்டால், போலீசில் ஒப்படைக்கப்படுகின்றனர். நேற்று கூட (நேற்று முன்தினம்) ஒருவரை பிடித்து ஒப்படைத்தோம். முதியவர்கள் சிலர், எங்களால் அனைத்து வேலைகளையும் செய்ய முடியாது; உதவ ஆள் வேண்டும் என கேட்டனர். நாங்கள் மறுத்து விட்டோம். இங்கு, 'பெய்டு அட்டெண்டர்' கிடையாது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X