வழித்தடம் அடைக்க முயற்சி: கலெக்டரிடம் மக்கள் புகார் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வழித்தடம் அடைக்க முயற்சி: கலெக்டரிடம் மக்கள் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 டிச
2021
01:24

கோவை;மதுக்கரை, மாச்சம்பாளையம் ரோட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த சிலர், பொதுமக்கள் பயன்படுத்தும் வழித்தடத்தை அடைத்து வைக்க முயற்சிப்பதாகவும், போலீஸ் துணையுடன் வந்து மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில், 60 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். குடியிருப்புக்கு அருகில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கிருந்து வரும் வழித்தடம் மூலமாகவே எங்கள் பகுதியில் உள்ள, 20 வீடுகளுக்குச் செல்ல முடியும். தாசில்தார் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காத நிலையில், அரசியல் காரணங்களுக்காக அவ்வழித்தடத்தை அடைத்து வைக்க முயற்சிக்கின்றனர். போலீஸ் துணையுடன் வந்து வழித்தடத்தை அடைக்க முயற்சிக்கின்றனர்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X