வனத்துறையை கண்டித்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வனத்துறையை கண்டித்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 டிச
2021
01:27

பொள்ளாச்சி:பழங்குடியின மக்கள் குடியிருப்புகளை பிரித்தெடுத்த வனத்துறையைக்கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சியில் நடந்தது.கோவை மாவட்டம் வால்பாறை கல்லார்குடி பழங்குடியின மக்களுக்கு, தெப்பக்குள மேட்டில் 23 பேருக்கு வீடு கட்ட அரசு பட்டா வழங்கியது. அந்த இடத்தில், குடியேற திட்டமிட்டனர். ஆனால், வனத்துறையினர், மக்களின் குடிசைகளை அகற்றினர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கல்லார் பழங்குடியின மக்களுக்கு தெப்பக்குள மேடு பகுதியில் வீடு கட்ட தலா, 1.5 செனட் இடம் வழங்கப்பட்டது. ஆனால், அளந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் இடத்தில் குடிசையிட்டதால் அகற்றினோம்,' என்றனர்.இந்நிலையில், வனத்துறையின் செயலைக்கண்டித்தும், முதல்வரின் உத்தரவை அமலாக்க கோரியும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்தது. மீண்டும் சர்வேகல்லார் பழங்குடியின மக்கள் பொள்ளாச்சி சப் -கலெக்டர் தாக்கரேஞானதேவிடம் நேரில் புகார் தெரிவித்தனர். கோவை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து, தெப்பக்குளம் மேட்டுப்பகுதியில் நேற்று நேரடியாகச்சென்று இடத்தை சர்வே செய்தனர்.பழங்குடியின மக்களின் செயல்பாட்டாளர் தனராஜ் கூறுகையில், 'பழங்குடியின மக்களை துன்புறுத்தும் வகையில், வனத்துறையினர் இப்படி நடந்து கொண்டது வருத்தமளிக்கிறது. விரைவில் கிராம சபை கூடி, கல்லார் பழங்குடியின மக்கள் விரும்பிய இடத்தில், வீடு கட்டும் வகையில் இடம் வழங்க தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X