ஜெட் வேகத்தில் பரவும் டெங்கு: கோவையில் 20 பேருக்கு சிகிச்சை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

05 டிச
2021
15:41
பதிவு செய்த நாள்
டிச 05,2021 01:32

கோவை:டெங்கு காய்ச்சலுக்கு, கோவை அரசு மருத்துவமனையில், 17 குழந்தைகள் உட்பட, 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



சில நாட்களாக, கோவையில் மழை பெய்து வருகிறது. வழிந்தோட வழியின்றி ஆங்காங்கே தேங்கும் தண்ணீரால் கொசுக்களும் அதிகளவு உற்பத்தியாகிறது. டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. மழைநீர் தேக்கத்தை தடுக்கவும், சுற்றுப்புற பகுதிகளை துாய்மையாக வைத்துக்கொள்ளவும், சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.டெங்கு காய்ச்சலுக்கு பெரியவர்களை விட குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.



கோவை அரசு மருத்துவமனையில், 17 குழந்தைகள், 3 பெரியவர்கள் என, சிகிச்சை பெறுகின்றனர். இது, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் விவரம் மட்டுமே. தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆங்காங்கே உள்ள கிளீனிக்குகளில் சிகிச்சை பெறுவோர் விவரங்களை கணக்கிட்டால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.



தொண்டாமுத்துாரில் அதிகம்




தொண்டாமுத்துார் வட்டாரத்தில், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொண்டாமுத்துார் வட்டாரத்தில், தொண்டாமுத்துார், குளத்துபாளையம், வேடபட்டி, பூலுவபட்டி, பேரூர் செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த ஒரு மாதத்தில், 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று, பூலுவபட்டியை சேர்ந்த குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.


சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'மழை பெய்து வருகிறது. வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் இருப்பது தெரிந்தவுடன், டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும்' என்றனர்.



அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''டெங்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கான படுக்கை எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டுள்ளது. சிகிக்சை பெற, தினமும், 50க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அவர்களுக்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X