அன்னூர்:கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே தேவம்பாளையம், கிழக்கு வீதியில் வசித்தவர் ராஜம்மாள், 70. மகள் இறந்து விட்டார். மருமகன் மற்றும் மூன்று பேரக் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.கோவில்பாளையத்தில் தொடர் மழை பெய்தது. நேற்று அதிகாலை 1:30 மணிக்கு ராஜம்மாள் வீட்டின் மேற்கு மண்சுவர் இடிந்து விழுந்தது. இதில், சிக்கி ராஜம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.