பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரங்கசமுத்திரத்தைச்சேர்ந்த டிரைவர் லலித்குமார்,21. இவருக்கும், 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று திருமணம் செய்துள்ளார்.தகவல் அறிந்த, சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 'போக்சோ' சட்டத்தின் கீழ், லலித்குமாரை கைது செய்தனர்.இதேபோல், பொள்ளாச்சியை சேர்ந்த, 17 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் காதலித்துள்ளனர். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில், சிறுவனை 'போக்சோவில்' கைது செய்தனர்.