மேட்டுப்பாளையம்:''தமிழ்நாடு ஹோட்டல்களில் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் வாயிலாக, சுற்றுலாத் துறைக்கு, 22 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது,'' என, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்- ஊட்டி ரோட்டில் செயல்பட்டு வந்த அரசுக்கு சொந்தமான ஹோட்டல் தமிழ்நாடு, நான்கு ஆண்டுகளாக மூடியுள்ளது. இதை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார்.இதன் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது : நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதி தலைசிறந்த சுற்றுலாதலங்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது என கருத்துக்கணிப்பு வந்துள்ளது. தமிழ்நாடு ஹோட்டல்களில், கொரோனா ஊரடங்கு பின்பு, ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் வாயிலாக, 22 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. நீலகிரியில் சினிமா படப்பிடிப்பு தளம் அமைக்கும் கோரிக்கையை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதை, விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அமைச்சர் கூறினார்.