பார்க்கிங் வசதி இல்லாத மண்டபங்களால் பயணிகள் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2021
02:31

தேனி -‛‛தேசிய நெடுஞ்சாலை ஒரங்களில் வாகன நிறுத்தும் வசதி இல்லாமல் கட்டிய திருமணம் மண்டபங்களால் முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.




தேனி மாவட்டத்தில் 256 திருமண மண்டபங்கள் உள்ளன. இதில் நிகழ்ச்சிகள் நடத்த மண்டப வசதிக்கு ஏற்ப நாள் ஒன்றுக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை வாடகையாக வசூலிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் 43 மண்டபங்கள் வாகனங்கள் நிறுத்த வசதியின்றி உள்ளன. இதனால் நிகழ்ச்சிகளுக்கு கார், வேன்களில் வரும் உறவினர்கள் வாகனங்களை ரோட்டில் நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றனர்.



இதுதவிர தேசிய நெடுஞ்சாலையில் பட்டாசு வெடித்து பயணிகள் பஸ் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இந்த நெரிசலைில் பல நாட்கள் ஆம்புலன்ஸ்சும் சிக்குகிறது. வி.ஐ.பி.க்கள் திருமணத்தின் போது மண்டபம் முன் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க டிராபிக் போலீசார் பணி செய்கின்றனர். இந் நிலை ஒவ்வொரு முகூர்த்தின் போதும் 2 நாட்கள் நீடிக்கிறது. இதில் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.ராமகிருஷ்ணன், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்,போடி: ‛‛திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை, ராமேஸ்வரம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை தேனி மாவட்டத்தில் உள்ளன. மண்டப உரிமையாளர்கள் நகராட்சி பகுதிகளில் உரிமம் பெறுவதில் சிக்கல் உள்ளது.



ஆனால் ஊரக பகுதிகளில் எளிதாக உரிமம் பெற்று, மண்டபங்களை கட்டுகின்றனர். அங்கு ‛பார்க்கிங்' வசதி செய்வது இல்லை. ‛பார்க்கிங்' வசதிகள் அவசியம் இருக்க வேண்டும் என நகர் ஊரக நகரமைப்பு விதியில் உள்ளது. இதை மண்டப உரிமையாளர்களும், அதிகாரிகளும் கண்டு கொள்வது இல்லை. பொதுமக்களும், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். உள்ளாட்சி அதிகாரிகள் மண்டபங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X