மூணாறு-- -மூணாறில் முதிரைபுழை ஆறு மாசு ஏற்படுவது குறித்து ஆய்வு நடத்த வசதியாக சர்வே பணிகள் நடக்கிறது.மூணாறின் மையப் பகுதியில் ஓடும் முதிரைபுழை ஆற்றின் நீரை பள்ளிவாசல், குஞ்சு தண்ணி பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர். நல்லதண்ணி ஆறு, குண்டளையாறு, கன்னியாறு ஆகியவை இணைந்து முதிரை புழை ஆறு உருவாகிறது. அதில் நல்லதண்ணி ஆறு வாரத்தில் மூன்று நாட்கள் தண்ணீர் கருப்பு நிறத்தில் மாறி மாசு ஏற்படுத்தி வருகிறது. அதனால் ஆற்றில் மீன் உள்பட நீர் வாழ் உயிரினங்கள் அழிந்து விடுகின்றன. ஆறு மாசுபடுவதை ஊராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டு கொள்வதில்லை.ஆறு மாசு ஏற்படும் காரணம் கண்டறிந்து ஆற்றை மீட்கும் வகையில் யு.என்.டி.பி. ஆய்வு நடத்த உள்ளது. அதன் முன்னோடியாக பெங்களூரூ தனியார் நிறுவனம் ஆற்றில் 2கி.மீ.தூரம் சர்வே நடத்தியது. ஆய்வு அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் தாக்கல் செய்ய உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.