மதுரை---மேலுார் அருகே கண்மாய்பட்டி அழகு. உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தாட்கோ சார்பில் கண்மாய்பட்டியில் 30 ஆண்டுகளுக்கு முன் ஆதிதிராவிடர்களுக்கு காலனி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. அவை பழுதடைந்துள்ளன. மழைக்கு இடிந்துவிழ வாய்ப்புள்ளது. அச்சத்தில் வாழ்கிறோம். சீரமைக்கக்கோரி கலெக்டர், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: புதிதாக வீடுகள் 6 முதல் 9 மாதங்களில் அமைக்கப்படும். நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது. நீதிபதிகள்: புதிய வீடுகள் அமைக்கும்வரை அங்கு வசிக்கும் மக்களுக்குமாற்று இடம் ஏற்பாடு செய்வது குறித்து அரசு தரப்பில் ஜன.,10ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.