உசிலம்பட்டி -உசிலம்பட்டியில் பா.ஜ., சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் சொக்கநாதன், ஊரக வளர்ச்சி மாவட்ட தலைவர் மொக்கராஜ், பிரசார பிரிவு தலைவர் ரஞ்சித், பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், நகர் தலைவர் பாண்டியராஜன், ஒன்றிய தலைவர்கள் சின்னச்சாமி, முருகன், இளைஞரணி தீபன்முத்தையா, சேடபட்டி ஒன்றியம் மாத்துாரான், மருதுகாளை, செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் செல்வம், பொதுச்செயலாளர்கள் தினகரன், சவுந்தரபாண்டியன், நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.